உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கும்மிடிப்பூண்டி சிறுமி சலபாசனத்தில் சாதனை

கும்மிடிப்பூண்டி சிறுமி சலபாசனத்தில் சாதனை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த வினோத் - ராஜஸ்ரீ தம்பதி மகள் தர்ஷினி, 7. கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் யோகா மையத்தில், யோகா பயிற்சி பெற்று வருகிறார்.இவர், தலை கவிழ்ந்து படுத்து சலபாசனத்தில் நின்றபடி, கால்கள் இரண்டையும் மேல்நோக்கி நீட்டி, ஒரு நிமிடத்தில், 65 முறை இடுப்பின் பின் பகுதியால் தலையை தொட்டு சாதனை படைத்தார்.இவரது சாதனை, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட், அசிஸ்ட் உலக சாதனை' ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளன.சாதனை படைத்த சிறுமி தர்ஷினி, யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை பள்ளி நிர்வாகமும், சக மாணவர்களும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை