மேலும் செய்திகள்
வாலிபர் மீது தாக்குதல் ; 7 பேர் மீது வழக்கு
06-Jun-2025
சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 49. வழக்கறிஞரான இவர், ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட பா.ம.க., இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், அரக்கோணம் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள வேகத்தடையை தாண்டும் போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் விழுந்து படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் இறந்தார்.சோளிங்கர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அந்த பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில், பதிவான காட்சிகள் வைத்து, சக்கரவர்த்தி விபத்தில் இறந்தாரா, வேறு ஏதும் சம்பவம் நடந்ததா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், சக்கரவர்த்தி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, பா.ம.க., வினர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, மாலையில் விடுவித்தனர். சக்ரவர்த்தியின் உடல் பிரேத பரிசோதைனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.***
06-Jun-2025