மேலும் செய்திகள்
வேளாங்கண்ணியிலும் சிறப்பு பாதை: உதயநிதி
28-Oct-2024
கடற்கரை குடோனில் திருடிய 3 பேர் கைது
20-Oct-2024
போதையில்லா பாரதம் பிரகாசம்: குஜராத், டில்லியில் சம்பவம்
15-Nov-2024 | 1
திருவொற்றியூர்:கடற்கரையில், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட இரும்பு வேலி முழுதுமாக சேதமடைந்து உள்ளது.திருவொற்றியூர், என்.டி.ஓ., குப்பம், திருச்சிணாங்குப்பம், ஒண்டிகுப்பம், திருவொற்றியூர் குப்பம், ராமகிருஷ்ணா நகர், எண்ணுாரில், பாரதியார் நகர், சின்னகுப்பம், பெரியகுப்பம், தாழங்குப்பம் உட்பட ஆகிய பகுதிகளில் கடற்கரை உள்ளது.இந்த கடற்கரைகளில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் பொழுதை போக்கிச் செல்ல கூடுவது வழக்கம். ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காது.அதுபோன்ற நேரங்களில், கடல் அலையில் குளித்து விளையாடும் சிலர், ராட்சத அலையில் சிக்கி மாயமாவதும், உயிர் சேதம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.இதற்கு தீர்வாக, போலீசார் தொடர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.அதன் காரணமாக, தாழங்குப்பம் மற்றும் பாரதியார் நகர் ஆகிய கடற்கரைகளில், உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.இருப்பினும், அதிக மக்கள் புழக்கம் இல்லாத கடற்கரைகளில், சிலர் கடல் அலையில் விளையாடும் போது, உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து கொண்டே இருந்தது.அதனால், மாநகராட்சி - தனியார் பங்களிப்புடன் சேர்ந்து, கடற்கரைகளில் வேலி அமைக்கும் பணி துவங்கியது. அதன்படி, ஓராண்டிற்கு முன், என்.டி.ஓ., குப்பம் பகுதியில், 500 மீட்டர் துாரத்திற்கு இரும்பு வேலி அமைக்கப்பட்டது.தற்போது, அந்த வேலி சேதமடைந்து விட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சேதமடைந்த இரும்பு வேலியை சீரமைக்க வேண்டும். மக்கள் புழக்கம் இல்லாத இடங்களில் வேலி அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Oct-2024
20-Oct-2024
15-Nov-2024 | 1