உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குறைந்தழுத்த மின்சாரம் சந்தோஷபுரத்தில் அவதி

குறைந்தழுத்த மின்சாரம் சந்தோஷபுரத்தில் அவதி

சேலையூர், சேலையூர் அடுத்த சந்தோஷபுரத்தில், இரவு முழுதும் குறைந்தழுத்த மின்சார பிரச்னை நிலவியதால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.சோழிங்கநல்லுார் மின் கோட்டத்திற்கு உட்பட்ட, சந்தோஷபுரம், விக்னராஜபுரம், மூன்றாவது தெருவில், 100 குடும்பங்கள் உள்ளன. இத்தெருவில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மின் வெட்டு ஏற்பட்டது.இரவு முழுதும் மின்சாரம் வராததால், குழந்தைகள், பெண்கள் துாங்க முடியாமல் சாலைகளில் தவம் கிடந்தனர். நேற்று காலை 7:00 மணிக்கு, மின்சாரம் வந்துள்ளது.அதுவும் குறைந்தழுத்த மின்சாரமாக விநியோகிக்கப்பட்டதால், மோட்டார் இயக்க முடியவில்லை. இதனால், தண்ணீர் இன்றி பலர் சிரமப்பட்டனர். நேற்று மாலை வரை, இப்பிரச்னை நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ