உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தங்க, வைர நகைகள் திருட்டு வேலைக்கார பெண் கைது

தங்க, வைர நகைகள் திருட்டு வேலைக்கார பெண் கைது

சென்னை, போயஸ் கார்டன், கஸ்துாரி எஸ்டேட், 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வனித சித்தார்த், 38. அவர், தன் கணவருடன் இணைந்து, இணைய வாயிலாக பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த, 7 ம் தேதி வீட்டில் லாக்கரை திறந்து நகைகளை சரிபார்த்தபோது, 24 சவரன் தங்க நகைகள், சில வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும், 23,500 ரூபாய் ரொக்கம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, வனிதா சித்தார்த் அளித்த புகாரில், தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். புகார்தாரர் வீட்டில் வேலை பார்த்துவந்த, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வனிதா, 25 என்பவர், நகை மற்றும் பணத்தை சிறுக, சிறுக திருடியது தெரியவந்தது.வனிதாவை நேற்று கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 24 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி