உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா பராமரிப்பு தனியார் வசமாகிறது

கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா பராமரிப்பு தனியார் வசமாகிறது

சென்னை, கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள காலநிலை பூங்கா பராமிப்பை, ஐந்தாண்டுகால ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. சென்னை பெருநகர் போக்குவரத்து பெரிசலுக்கு தீர்வாக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம், 2023 டிச.,30ல் திறக்கப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு, 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டாலும், தொல்லியல் துறை தடையால், 40 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள, 16 ஏக்கர் நிலத்தில், சி.எம்.டி.ஏ.,வான சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், 15 கோடி ரூபாயில், காலநிலை பூங்காவை அமைத்துள்ளது. இந்த பூங்கா சில மாதங்கள் முன் திறக்கப்பட்டது. பொதுவாக இது போன்று அமைக்கப்படும் பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் விடப்படுவது வழக்கம். இதற்கு மாறாக, இந்த பூங்காவை தனியாரிடம் ஒப்படைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில், பூங்காவை பராமரிப்பதற்கான தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.அடுத்த சில மாதங்களில் பூங்கா பராமரிப்பு, தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை