மேலும் செய்திகள்
பழைய குற்றவாளிகள் மூவர் கைது
16-May-2025
ஓட்டேரி,ஓட்டேரி பகுதியை சேர்ந்த, 32 வயது பெண், அப்பகுதியில் தனியே வசித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன், அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் சென்ற போது, அதே குடியிருப்பை சேர்ந்த நபர், அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.இதுகுறித்து அப்பெண், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்படி விசாரித்த போலீசார், பெண்ணிடம் தவறாக நடந்தது, அதே குடியிருப்பை சேர்ந்த, பெயின்டிங் வேலை பார்க்கும் லால்பாபு, 45, என்பதை அறிந்தனர்.ஆனால் அவர், போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை ஓட்டேரி போலீசார் அவரை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.
16-May-2025