உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கியோர் கைது

 மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கியோர் கைது

ஓட்டேரி: ஓட்டேரி, சந்தியப்பன் முதல் தெருவைச் சேர்ந்தவர் அம்பேத்கர் பிரியன், 27. தனியார் நிறுவன ஊழியரான இவர், பணி முடிந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த நான்கு வாலிபர்கள், மது அருந்த பணம் கேட்டு, அம்பேத்கர் பிரியனை அங்கேயே உட்கார வைத்துள்ளனர். அவரது தந்தையை தொடர்பு கொண்டு, 'ஜிபே'யில் பணம் அனுப்புமாறு மிரட்டியுள்ளனர். பின், அம்பேத்கர் பிரியனை தாக்கிவிட்டு, நால்வரும் அங்கிருந்து தப்பினர். அவர் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை அளித்த தகவலின்படி, ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதன்படி, அதே பகுதியைச் சேர்ந்த விஷ்வா, 27, கார்த்திக், 25, கோகுல் என்கிற எலி, 26, மற்றும் தினேஷ், 19, ஆகிய நான்கு பேரை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி