உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.டி.எம்., மைய காவலாளியை தாக்கியவர் கைது

ஏ.டி.எம்., மைய காவலாளியை தாக்கியவர் கைது

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையத்தில் காவலாளியாக பணிபுரிபவர் ரங்கநாதன், 57. இவர், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஏ.டி.எம்., வாசலில் வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.வாகனத்தை சற்று தள்ளி நிறுத்த காவலாளி முயன்றார்.இதை பார்த்த வாகன உரிமையாளர் காவலாளியை தகாத வார்த்தையால் திட்டியது மட்டுமல்லாமல், தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து விசாரித்த விருகம்பாக்கம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட சசிகரன் என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி