உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்றவர் கைது

பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்றவர் கைது

எம்.ஜி.ஆர்., நகர், ஜாபர்கான்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஆதித்யன், 21. இவர், நேற்று முன்தினம் மதியம், வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.திடீரென கேட்ட சத்தத்தால் எழுந்த ஆதித்யன், மர்ம நபர் ஒருவர் பூஜை பொருட்களை திருடிக் கொண்டிருந்ததை கண்டு கத்தினார்.அதனால், அந்த நபர் பூஜை பொருட்களை அப்படியே போட்டு விட்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்படி, எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்தனர்.அதில், திருட்டில் ஈடுபட முயன்றது, செங்கல்பட்டு மாவட்டம், பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த நாகராஜ், 45, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை