மேலும் செய்திகள்
பைக் திருடன் கைது 3 பைக் பறிமுதல்
20-Mar-2025
மதுரவாயல்,:சென்னை, ஆலப்பாக்கம், அய்யாவு நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 52.இவர், ஆலப்பாக்கம், திருமுருகன் நகரில் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.கடந்த 11 ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே பெட்டியில் இருந்த பணம், மற்றும் கடையின் மேல் தங்கியிருந்த ஊழியரின் மொபைல் போன் ஆகியவை திருடு போயிருந்தது தெரிந்தது.இது குறித்து சிவக்குமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், 28. என்பவர் திருடியது தெரிந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அவரிடமிருந்து 4,700 ரூபாய், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சதீஷ் மீது ஏற்கனவே ஏழு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
20-Mar-2025