ரூ.60 லட்சம் சொத்தை அபகரித்தவர் கைது
சென்னை,சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம், 48. அவருக்கு ஆதம்பாக்கத்தில், 60 லட்சம் மதிப்பிலான, 4,605 சதுர அடியில் நிலம் உள்ளது. அவற்றை, போலி ஆவணம் தயாரித்து சிலர் அபகரித்துள்ளதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்து இருந்தார்.நில மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி, போலி ஆவணங்கள் வாயிலாக, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ரவி, 48 என்பவரை, நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.