உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாட்ஸாப் அழைப்பில் மிரட்டி ரூ.2 லட்சம் பறித்தவருக்கு வலை

வாட்ஸாப் அழைப்பில் மிரட்டி ரூ.2 லட்சம் பறித்தவருக்கு வலை

பெரம்பூர், மதுரவாயலை சேர்ந்த ஒருவரிடம், வாட்ஸாப் அழைப்பில் மிரட்டி, 2 லட்ச ரூபாய் பணம் பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.பெரம்பூர் - மாதவரம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 30. இவருக்கு, கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி, வாட்ஸாப்பில் வீடியோ காலில் வந்த மர்மநபர், 'உங்களுக்கு மும்பையில் கனரா வங்கி கணக்கு உள்ளது. அதில், 2 லட்சம் ரூபாய் கறுப்பு பணம் உள்ளது. அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால், 2 லட்சம் ரூபாய் பணத்தை நான் கூறும் வங்கி கணக்கில் அனுப்ப வேண்டும்' எனக்கூறியுள்ளார்.இதை நம்பிய பாலாஜியும், மர்மநபர் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளார். பின், தன் வங்கி கணக்குகளை சரிபார்த்த போது, மும்பையில் அவருக்கு கனரா வங்கியில் கணக்கு இல்லை என்பது தெரிந்தது.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாலாஜி, சம்பவம் குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து, உயரதிகாரிகளின் அனுமதி பெற்ற செம்பியம் போலீசார், வாட்ஸாப் அழைப்பில் வந்து ஏமாற்றிய மர்மநபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை