மேலும் செய்திகள்
'போக்சோ'வில் பெயிண்டர் கைது
16-Jul-2025
திருவான்மியூர், குப்பை கொட்ட சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருவான்மியூர், நவபாரத் காலனியை சேர்ந்த, 35 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம், வீட்டிலிருந்த குப்பையை, தெருவில் உள்ள தொட்டியில் கொட்ட சென்றார். கொட்டிவிட்டு திரும்பி வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அவரிடம் பாலியல் ரீதியாக சீண்டி தப்பினார். புகாரின்படி, திருவான்மியூர் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், திருவான்மியூர், அண்ணா தெருவை சேர்ந்த சுதாகர், 30, என்பது தெரிந்தது. நேற்று, அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் பிடிக்க முயன்றபோது, தப்பி ஓட முயன்றார். போலீசார் துரத்தி சென்றபோது, அவர் கால் தடுக்கி கீழே விழுந்தார். அதனால், அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை அளித்த போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
16-Jul-2025