உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் நிலையத்தில் கஞ்சா விற்றவர் கைது

பஸ் நிலையத்தில் கஞ்சா விற்றவர் கைது

வேளச்சேரி, உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் அருண், 28. இவர், நேற்று முன்தினம், வேளச்சேரி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியருடன் பேருந்துக்காக காத்திருப்பது போல் நின்றார்.சில இளைஞர்கள், இவரிடம் பொட்டலங்கள் வாங்கி சென்றனர். இதைக் கண்டு சந்தேகமடைந்த அப்பகுதிவாசிகள், வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் விசாரணையில், கஞ்சா பொட்டலங்கள் விற்பது தெரிந்தது. அருணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ