உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடைக்காரரிடம் போன் பறித்த வர் பிடிபட்டார்

கடைக்காரரிடம் போன் பறித்த வர் பிடிபட்டார்

அயனாவரம், அயானரவம், பொன்னுவேல்புரத்தைச் சேர்ந்தவர் கோபால், 32. இவர், அதே பகுதியில், தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.கோபால் கடந்த 30ம் தேதி இரவு, மனைவியுடன் கோபித்து கொண்டு, துரைசாமி தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் துாங்கினார்.அடுத்தநாள் அதிகாலை 3:00 மணியளவில், கோபாலின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை, இருவர் திருட முயன்றனர். சுதாரித்த கோபால், அவர்களை தடுத்தபோது, இருவரும் அவரை தாக்கி, மொபைல் போன் மற்றும் 1,000 ரூபாயை பறித்து தப்பினர்.அயனாவரம் போலீசார் விசாரித்து, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன், 23, ஜோதி நகரைச் சேர்ந்த ஸ்ரீராம், 20, ஆகியோரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது, ஏற்கனவே வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை