மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது
09-Oct-2025
முத்தியால்பேட்டை: பெண்ணை மொபைல் போனில், ஆபாசமாக படம் பிடித்தவரை, போலீசார் கைது செய்தனர். கொண்டித்தோப்பைச் சேர்ந்த 36 வயது பெண், நேற்று தன் மகனுடன் மண்ணடி, காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று விட்டு, ராமசாமி தெருவில் உள்ள கடை ஒன்றில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். அங்கு அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர், பெண்ணின் இடுப்பை தன் மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த அந்த பெண்ணின் மகன் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மர்ம நபரை நையப்புடைத்து, முத்தியால்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர், மண்ணடியைச் சேர்ந்த சையது சபீர், 52, என்பதும், அவரது மொபைல் போனை, வாங்கி சோதனை செய்த போது, பெண்ணை ஆபாசமாக படம் பிடித்த வீடியோ இருந்துள்ளது. போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
09-Oct-2025