உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உரிய ஆவணங்களின்றி மணல் எடுத்து சென்றவர் கைது

உரிய ஆவணங்களின்றி மணல் எடுத்து சென்றவர் கைது

திருவொற்றியூர், சென்னை கலெக்டர் அலுவலகம், புவியியல் மற்றும் சுங்கத்துறையின் உதவி புவியாளர் சுபத்ரா தேவி தலைமையிலான குழுவினர், திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலை, எல்லையம்மன் கோவில் சந்திப்பில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியே வந்த டாரஸ் லாரியை மடக்கி விசாரித்தனர். அப்போது, உரிய ஆவணங்களின்றி லாரியில் மணல் ஏற்றி செல்வது தெரியவந்தது. அதிகாரிகள் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுனரான, திருவள்ளூர், தாமரை பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், 38, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ