பொது பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
நந்தம்பாக்கம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர். நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 28 வயது பெண், தன் வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, மொபைல் போனின் தான் குளிப்பதை யாரோ வீடியோ எடுப்பதை கண்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு, உறவினர்கள் வந்து பார்த்தபோது, அந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார். உறவினர்கள் அவரை துரத்தி பிடித்தனர். மொபைல் போனை வாங்கி பார்த்தபோது, பெண் குளிப்பதை வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை நையப்புடைத்து, நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், மணப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ், 25, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.