உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி

மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி

வேளச்சேரி, ஆக. 4-அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்து, மின்மாற்றியில் ஏறி மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்தவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். வேளச்சேரி நுாறடி சாலையில், எஸ்.ஐ.எஸ்., மெரீடியன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், ஒரு மின்மாற்றி உள்ளது. நேற்று மதியம், 45 வயது மதிக்கத்தக்க நபர், குடியிருப்பில் இருந்த காவலாளிகளிடம் பேச்சு கொடுத்து, தண்ணீர் வாங்கி குடித்தார். திடீரென, வளாகத்தில் உள்ள மின்மாற்றியில் ஏறி, மின் கம்பியை பிடித்தார். அதில், மின்சாரம் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேளச்சேரி தீயணைப்பு படையினர், உடலை கீழே இறக்கி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் பெயர், முகவரி தெரியவில்லை. வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ