உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

2வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

சென்னை, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பினேஷ், 34; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று முன்தினம் சூளைமேடில் சித்தப்பா மகளின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தார்.நிகழ்ச்சி முடிந்த பின் மது அருந்தி, 2வது தளத்தில் உறங்கச் சென்றார். நள்ளிரவு அவசர உபாதை கழிப்பதற்காக எழுந்தபோது, 2வது தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்தவரை, உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று அதிகாலை உயிரிழந்தார். சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை