மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவர் சிக்கினர்
13-May-2025
வடபழனி, வடபழனி, ஆற்காடு சாலை பேருந்து பணிமனை அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு கோடம்பாக்கம் மண்டல துாய்மை பணியாளர்கள், சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 30 வயது பெண்ணிடம், மது போதையில் வந்த இளைஞர் தன் அந்தரங்க உறுப்பை காட்டி அநாகரிகமாக நடந்துக் கொள்ள முயன்றார்.அப்பெண் சத்தம் போடவே, உடன் பணி புரியும் ஊழியர்கள் சேர்ந்து, அந்த இளைஞரை மடக்கி பிடித்து, நையப்புடைத்து வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், பிடிபட்டவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசன், 18, என்பதும், வடபழனி, அம்பாள் நகரில் உள்ள ஹோட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, கவியரசனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
13-May-2025