மேலும் செய்திகள்
7.50 கிலோ கஞ்சாவுடன் தலைமறைவு ரவுடி கைது
10-May-2025
கஞ்சா வழக்கில் ஜாமின் தப்பி ஓடிய நபர் கைது
07-May-2025
ஆவடி, மதுராந்தகம், திருமலை வையாவூர், பட்டுவாரி நகரைச் சேர்ந்தவர் முனுசாமி, 38. கடந்த 2016 ல், நடிகர் விஜயகுமார் வீட்டில் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் தொடர்புடையவர்.இவர் மீது, ஆவடி, திருமுல்லைவாயில், ஜெ.ஜெ நகர், தலைமை செயலக காலனி, வில்லிவாக்கம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில், 20 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு, 'பிடி வாரண்ட்' பிறப்பிக்கப்பட்ட நிலையில், 21 ஆண்டுகளாக போலீசாமிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.கடந்த ஆண்டு இறுதியில், மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், வையாவூர் பகுதியில் பதுங்கி இருந்த முனுசாமியை, திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின் முனுசாமி நேற்று, அம்பத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ***
10-May-2025
07-May-2025