உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹோட்டலில் ரூ.75,000 திருடியவர் ைகது

ஹோட்டலில் ரூ.75,000 திருடியவர் ைகது

ஓட்டேரி, பட்டாளம், மங்கபதி தெரு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்குமார், 36. இவர் நடத்தும் ஹோட்டலில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், புளியந்தோப்பை சேர்ந்த சதீஷ்குமார், 34, என்பவர், சமையல் வேலைக்கு சேர்ந்துள்ளார்.இந்நிலையில், ஜன., 25ம் தேதி திடீரென வெளியே சென்ற சதீஷ்குமார், மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பி வரவில்லை. கல்லாப் பெட்டியை பார்த்த போது, 75,000 ரூபாய் காணாமல் போயிருந்தது.இதுகுறித்து, ஓட்டேரி காவல் நிலையத்தில் ஆனந்த்குமார் அளித்த புகாரின்படி சதீஸ்குமாரை தேடி வந்த ஓட்டேரி போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை