உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மார்கழி இசை திருவிழா - நாடக நடிகைக்கு பாராட்டு

மார்கழி இசை திருவிழா - நாடக நடிகைக்கு பாராட்டு

சென்னை, 'தழல் வீரம்' நாடகத்தில் நடித்த ஸ்ருதியை, நடிகர் சிவகுமார் பாராட்டி கவுரவித்தார்.நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி., வைஷ்ணவ பெண்கள் கல்லுாரியில், மூன்று நாட்கள் கலை விழா நடந்து வருகிறது.நிகழ்வில் நேற்று, ஸ்ருதியின் 'தழல் வீரம்' என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதை இயக்கி, நடித்தார் சுருதி.விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் சிவகுமார், நாடகத்தை குறித்து பாராட்டி, விருது வழங்கி, ஸ்ருதி மற்றும் அவரது தந்தை சிவபிரசாந்த் இருவருக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.இந்நிகழ்வில், கல்லுாரியின் முதல்வர் அர்ச்சனா பிரசாந்த், காட்சிதொடர்பியல் துறையின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெய்ஸ்ரீ உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ