மெரினா நீச்சல் குளம் நாளை திறப்பு
சென்னை: பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், மெரினா நீச்சல் குளம் நாளை திறக்கப்படுகிறது. மெரினா கடற்கரை நீச்சல் குளத்தில், 2.50 கோடி ரூபாயில், தண்ணீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு, மாற்றுத்திறனாளிகள் இறங்கி குளிக்க தனி பாதை, நவீன கழிப்பறை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளுக்காக, கடந்த ஜூலை மாதம் மூடப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், நாளை திறக்கப்படுவதாக, மாநகராட்சி அறிவித்துள்ளது.