உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.சி.சி., - எம்.ஆர்.எப்., வாலிபால்: பள்ளிகள் பலப்பரீட்சை

எம்.சி.சி., - எம்.ஆர்.எப்., வாலிபால்: பள்ளிகள் பலப்பரீட்சை

சென்னை, எம்.சி.சி., - எம்.ஆர்.எப்., கோப்பைக்கான வாலிபால் போட்டியில், கே.பி.ஜே., குருகுலம் மற்றும் எம்.சி.சி., 'ஏ' அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து நடத்தும், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கின. முதல் நாளான நேற்று, வாலிபால் மற்றும் பேட்மின்டன் போட்டிகள் நடந்தன. அதில், செட்டிநாடு வித்யாஷ்ரம், கே.பி.ஜே., குருகுலம், எம்.சி.சி., - லிட்டில் பிளவர் உள்ளிட்ட 16 பள்ளிகள் பங்கேற்றன.லிட்டில் பிளவர் மற்றும் பி.எம்.எஸ்., பள்ளிகளுக்கான முதல் வாலிபால் போட்டியை, எம்.சி.சி, பள்ளி முதல்வர் ஜெபதாஸ் தினகரன் துவக்கி வைத்தார். அனைத்து நாக் அவுட் போட்டிகள் முடிவில், கே.பி.ஜே., - செட்டிநாடு குருகுலம், எம்.சி.சி., 'ஏ' மற்றும் பி.எம்.எஸ்., பள்ளிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.முதல் அரையிறுதியில், கே.பி.ஜே., அணி, 25 - 2, 25 - 10 என்ற கணக்கில், செட்டிநாடு வித்யாஷ்ரம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் எம்.சி.சி., 'ஏ' அணி, 25 - 13, 25 - 12 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால், கே.பி.ஜே., மற்றும் எம்.சி.சி., 'ஏ' அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.பேட்மின்டன் போட்டியில், தனிநபரில் 15 பள்ளி மாணவர்களும், இரட்டையரில் ஏழு பள்ளி அணிகளும் பங்கேற்றுள்ளன. இன்று முதல் கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை