உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்கம்பத்தில் பைக் மோதி மெக்கானிக் பலி

மின்கம்பத்தில் பைக் மோதி மெக்கானிக் பலி

சேலையூர், தாம்பரம் அருகே சேலையூர், ஜோதி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 27. அதே பகுதியில், பைக் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் இரவு, கோவிலான்சேரியில் இருந்து மாம்பாக்கம் செல்லும் வனப்பகுதியில், பைக்கில் சென்றார்.அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பைக் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், தலையில் அடிபட்ட வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, வெங்கடேசன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை