மேலும் செய்திகள்
மதுரை ரயில் நிலையம் 70 சதவீதம் பணி நிறைவு
17-May-2025
சென்னை மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ ரயில் தடத்தில், கோயம்பேடு - ஆழ்வார்திருநகர் வரை, மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மூன்று வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.இவற்றில் ஒன்றான, மாதவரம் - சோழிங்கநல்லுார் வரை, 47 கி.மீ., துாரம் வழித்தடம் அமைகிறது. இந்த தடத்தில், 46 ரயில் நிலையங்கள் அமைகின்றன. மாதவரம், ரெட்டேரி, கொளத்துார், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பாதைகள் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஆனால், கோயம்பேடு மார்க்கெட் முதல் ஆழ்வார்திருநகர் இடையே நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை இருந்ததால், பணிகள் துவங்க தாமதமானது. தற்போது, இந்த பகுதியிலும் மேம்பால பணிகள் வேகம் பெற்றுள்ளன.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில் பெரும்பாலும், மேம்பால பாதை என்பதால், பணிகள் தாமதம் இன்றி நடக்கிறது. அதுபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து ஆழ்வார்திருநகர் வரையிலான பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்த தடத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நுாற்றுகணக்கான துாண்களில் மேம்பாலம் இணைப்பு பணிகள் நடக்கின்றன.இதுதவிர, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவிடங்களில் நடைமேடைகள், எஸ்கலேட்டர்கள், லிப்ட் போன்ற கட்டமைப்பு பணிகளும் நடக்கின்றன. அடுத்த ஆண்டு இறுதியில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
17-May-2025