உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிக மழை பெய்தால் சமாளிப்பது சிரமமே அமைச்சர் நேரு

அதிக மழை பெய்தால் சமாளிப்பது சிரமமே அமைச்சர் நேரு

சென்னை, ''சென்னையில் ஒரே நேரத்தில் அதிகளவு மழை பெய்தால் சமாளிப்பது சிரமம் தான்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார். மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 12.22 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணியை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: சென்னையில், 20 செ.மீ., மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தாலும், அரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக கனமழை பெய்தாலும், சமாளிப்பது சிரமம் தான். ஆனாலும், எவ்வளவு மழை பெய்தாலும் அவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சென்னையில் 4,000 சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. துாய்மை பணியாளர் களுக்கு, ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, பழைய ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்கு காலை உணவு வழங்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. பணி நிரந்தர விவகாரம் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை