மேலும் செய்திகள்
அரசு விரைவு பஸ்சில் அமைச்சர் பயணம்
22-May-2025
சென்னை,கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூருக்கு போதிய அளவில் பேருந்துகளை இயக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு, போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் காத்திருந்த, 6,000த்திற்கு மேற்பட்ட பயணியர், ஒரு வாரத்திற்கு முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் பயணியர் அதிகம் குவியும்போது, அவர்களை ஒழுங்குபடுத்த கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும் என, அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.இதையடுத்து, பயணியர் தேவைக்கு ஏற்ப, அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும். இதற்காக, கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும், சென்னையில் மின்சார பேருந்து சேவை துவக்குவது, போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வு கால பலன்கள், புதிய பேருந்துகள் இயக்கம் ஆகியவை குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
22-May-2025