வங்கி ஊழியரிடம் மொபைல் போன் பறிப்பு
சென்னை,:வங்கி ஊழியரை தாக்கி மொபைல் போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.மேற்கு மாம்பலம், அப்பாசாமி தெருவைச் சேர்ந்தவர் பாபு, 58. தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள கனரா வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, அண்ணா சாலை காயிதே மில்லத் கல்லுாரி அருகே நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து, கையால் சரமாரியாக தாக்கி அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.