பெண்ணிடம் மொபைல் போன் பறிப்பு
பல்லாவரம்: பல்லாவரம், பெருமாள் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி, 23. தனியார் ஊழியர்.இவர், நேற்று, தன் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு, பொருட்களை வாங்க நடந்து சென்றார்.அப்போது, அங்கு பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அஞ்சலியிடம் இருந்து மொபைல் போனை பறித்து தப்பி சென்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார், அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, மொபைல் போனை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.