உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு மருத்துவமனையில் மொபைல், பணம் திருட்டு

அரசு மருத்துவமனையில் மொபைல், பணம் திருட்டு

சென்னை,அம்பத்துார், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் கவுரி, 43. இவரது கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 6:20 மணியளவில் கணவரை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், மூன்றாவது தளத்தில் அனுமதித்து இருந்தார். கீழே செல்வதற்காக, கை பையை கணவரின் படுக்கை அருகே வைத்துவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, கை பை திருடு போயிருந்தது. அதில், மொபைல்போன், 500 ரூபாய், நான்கு வங்கி சேமிப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டை இருந்தன. இதுதொடர்பாக, திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை