அம்மா உணவகத்தில் பணம் திருட்டு
விருகம்பாக்கம்: விருகம்பாக்கத்தில் 'அம்மா' உணவகத்தில் பணம் திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். விருகம்பாக்கம், அருணாச்சலம் சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து, அம்மா உணவகத்தை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம் போல் அம்மா உணவகத்தை திறந்தபோது, அம்மா உணவகத்தில் இரண்டு நாள் வசூல் பணம் 5,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.