உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருமகனின் மண்டையை கல்லால் உடைத்த மாமியார்

மருமகனின் மண்டையை கல்லால் உடைத்த மாமியார்

பேசின்பாலம்:மது அருந்தும்போது தகராறு, மருமகனின் மண்டையை உடைத்த மாமியாரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். புளியந்தோப்பு, கே.பி.பார்க், 12வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு, 33. இவர் மீது, நான்கு வழக்குகள் உள்ளன. விஷ்ணு, தன் மனைவி பிரியா, 31, மாமியார் தேவி, 56, ஆகியோருடன், நேற்று முன்தினம் நள்ளிரவு மது அருந்தியுள்ளார். அப்போது, மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரியா மற்றும் தேவி இருவரும், விஷ்ணுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், தேவி கல்லால் தாக்கியதில், விஷ்ணுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறியது. அங்கிருந்தவர்கள், விஷ்ணுவை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனை தகவலின்படி, வழக்கு பதிந்த பேசின் பாலம் போலீசார், பிரியா மற்றும் தேவியிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை