உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாறுமாறு தடுப்பு கற்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

தாறுமாறு தடுப்பு கற்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

மணலி: மணலி விரைவு சாலையில் கன்டெய்னர், டிரெய்லர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும், பைக், ஸ்கூட்டர், ஆட்டோ, கார் போன்ற இலகுரக வாகனங்களும் அனுமதிக்கப்பட்டதால், அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையானது.இதற்கு தீர்வாக, சில ஆண்டுகளுக்கு முன் சாலையை இரண்டாக பிரிக்கும் வகையில், நடுவே கான்கிரீட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு, கன்டெய்னர் லாரிகள் செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டது.இரவு நேரங்களில் கற்கள் இருப்பது தெரியாததால், சில வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதாக புகார்கள் எழுந்தது. தொடர்ச்சியாக, தடுப்புக் கற்களுக்கு, ஒளிரும் வகையிலான பெயின்ட் மற்றும் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன.இந்நிலையில், சாலையின் நடுவே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கற்கள், கனரக வாகனங்கள் மோதி, ஆங்காங்கே தாறுமாறாக திரும்பியுள்ளது.இதனால், இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறி, விபத்தில் சிக்குகின்றனர்.எனவே உயிரிழப்பு ஏற்படும்முன், போக்குவரத்து போலீசார் சுதாரித்து தடுப்புக் கற்களை வரிசையாக அடுக்கி, புது பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை