மேலும் செய்திகள்
பஸ்சில் இருந்த டிக்கெட் இயந்திரம் திருட்டு
28-Dec-2025
பெண்ணை சீண்டிய வாலிபர் கைது
28-Dec-2025
திருநின்றவூர்: சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், நெமிலிச்சேரியில் இருந்து திருநின்றவூர் வரை கும்மிருட்டாக உள்ளதால், இரவு வேளையில் பீதியுடனே வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். நெமிலிச்சேரியில் இருந்து திருநின்றவூர் வரை 4 கி.மீ., சாலையை ஒட்டி நெமிலிச்சேரி ஊராட்சி, நடுக்குத்தகை ஊராட்சி மற்றும் திருநின்றவூர் நகராட்சி பகுதிகளில் 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதேபோல, டாட்டா ஸ்டீல் ஆலை, டி.ஐ., சைக்கிள் நிறுவனம் மற்றும் தாம்பரம் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில், சரிவர மின் விளக்குகள் எரியாததால், சாலை கும்மிருட்டாக மாறியுள்ளது. பல இடங்களில் சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெளிவட்ட சாலையில் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி அருகே சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. நெமிலிச்சேரி ரவுண்டானா கீழ், நெமிலிச்சேரி அணுகு சாலையில் இரு மார்க்கத்திலும் மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளது. நள்ளிரவு வேளைகளில் கும்மிருட்டை பயன்படுத்தி குற்றச்செயல்கள் அரங்கேறுகின்றன. அதேபோல, அணுகு சாலையோரம் மர்ம நபர்கள் குப்பை கொட்டி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Dec-2025
28-Dec-2025