சென்னை: கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய ஜூனியர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தமிழக அணியை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 2025 - 26ம் ஆண்டிற்கான ஆடவர் ஜூனியர் விஜய் மெர்ச்சன்ட் கோப்பை தொடர், கர்நாடக மாநிலத்தின் சிவமொக்காவில், டிசம்பர் 7ம் தேதி துவங்க உள்ளது. இதில், தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து மாநில அணிகளும் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்க உள்ள தமிழக அணியை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஜூனியர் தமிழக அணி வீரர்கள் விபரம்: கேப்டனாக ஸ்ரீதருண், துணை கேப்டனாக ஆர்யா கணேஷ், கவுசிக், தன்வந்த், ரோகித், புகழ் விஷ்ணு, புகழ், ரிஷப், அபிமான் சுந்தர், சஹர்ஷ், ரிஷி, தாஷ்வின், ப்ரவீன், செல்லதுரை ராஜா, அத்விக் ஈஸ்வரன் மற்றும் தருண். ---மேலும், ஆமதாபாத்தில் நடைபெற உள்ள தேசிய சீனியர் சையத் முஷ்தாக் அலி கோப்பை டி - 20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியின் விபரத்தையும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில், சென்னையைச் சேர்ந்த 8 வீரர்கள் தகுதி பெற்று அசத்தியுள்ளனர். சீனியர் தமிழக அணி வீரர்கள் விபரம்: அணியின் கேப்டனாக வருண், துணை கேப்டனாக ஜெகதீசன், துஷார் ரஹேஜா, அமித் சாத்விக், ஷாருக்கான், ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், சிவம் சிங், சாய் கிஷோர், சித்தார்த், நடராஜன், குர்ப்ரீத் சிங், இசக்கி முத்து, சோனு யாதவ், சிலம்பரசன், ரித்திக் ஈஸ்வரன்.