மேலும் செய்திகள்
பஸ் முனைய இருப்பறையில் தீ கிளாம்பாக்கத்தில் பரபரப்பு
11 minutes ago
சிறுமியிடம் அத்துமீறிய கடைக்காரருக்கு போக்சோ
58 minutes ago
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதுார் ஊராட்சியில், அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி அமைந்துள்ளது. இந்த கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி, 22ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தன.கல்லுாரி வளாகத்தில் நடந்த போட்டியில், விழுப்புரம், தர்மபுரி, சேலம், திருச்சி, வேலுார் என, 22 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லுாரிகளைச் சேர்ந்த 70 மாணவ --- மாணவியர் பங்கேற்றனர்.போட்டியில், நீதிமன்றத்தில் வாதாடுவது போன்று, மாணவர்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இதில், வெற்றி பெற்ற அணிகள் தேர்வு செய்யப்பட்டன. போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா, நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சவுந்தர் பங்கேற்றார்.அவர் பேசியதாவது:வழக்கறிஞர்கள் மொழியறிந்து புரியும்படி வாதிட வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் உள்ளுணர்வை கணித்து, தங்கள் வாதங்களை முன் வைப்பர். அதை நீங்கள் அறிய வேண்டும். அந்த அணுகுமுறையை கற்க வேண்டும்.நம் நாட்டில் வழக்கறிஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதற்கான திறமையை நீங்கள் வளர்த்து கொள்வது அவசியம். உங்களுக்கு அருகாமையில், திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. படிக்கும்போதே, நீங்கள் அங்கு சென்று வாதாடும் திறனை பார்த்து, மூத்த வழக்கறிஞர்களுடன் இணைந்து பயிற்சி பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.போட்டியில், முதலிடம் பிடித்த சென்னை புதுப்பாக்கம் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, இரண்டாம் இடம் பிடித்த வேலுார் அரசு சட்டக் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, நீதிபதி சவுந்தர் கோப்பை வழங்கினார்.நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி, கல்லுாரி முதல்வர் கயல்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.
11 minutes ago
58 minutes ago