தேசிய துப்பாக்கி சுடும் போட்டி எஸ்.ஆர்.எம்., மாணவி தகுதி
சென்னை: தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில், எஸ்.ஆர்.எம்., மாணவி தங்கம் உட்பட மூன்று பதக்கங்கள் வென்று, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சென்னையில்,16வது தென் மண்டல துப்பாக்கி சுடும், 'ஷாட்கன்' சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 10ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடந்தது. போட்டியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில், சென்னை எஸ்.ஆர்.எம்., மாணவி ஐஷ்மிகா, தமிழக வீராங்கனையாக பங்கேற்று, இளைஞர் பிரிவில் தங்கமும், ஜூனியர் பிரிவில் வெள்ளியும், ஆர்.என்., இளைஞர் பிரிவில் வெண்கலமும் வென்று அசத்தினார். இந்த வெற்றியால், டிசம்பர் இறுதி வாரத்தில் நடக்கும் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.