உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேருந்து நிறுத்தத்தில் இருக்கை வேண்டும்

பேருந்து நிறுத்தத்தில் இருக்கை வேண்டும்

பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் இருந்து வேலப்பன்சாவடி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தனியார் கண் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் உள்ளது. மருத்துவமனைக்கு செல்லும் மக்கள் மற்றும் உள்ளூர் குடியிருப்புவாசிகள் பயன்படுத்துகின்றனர். பயணியர் வசதிக்காக பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு இருக்கைகள் இல்லை. இதனால், இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் கால்கடுக்க நின்று, அரசு பேருந்தை பிடித்துச் செல்கின்றனர். வயதானோர் பலர், கால் வலி தாங்க முடியாமல் தரையில் அமர்ந்து பேருந்திற்காக காத்திருக்கின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் இருக்கைகள் அமைக்க வேண்டும்.- - -ஆர்.திவ்யா, பூந்தமல்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ