உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்லாவரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி

பல்லாவரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி

பல்லாவரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன.இந்த மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், 401 மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.அவர்களுக்கு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், செய்யூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், செங்கல்பட்டு மற்றும் பல்லாவரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, இம்மாதம் முழுதும் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவர்களுக்கு அதற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. காலையில் இயற்பியல், தாவரவியல் பாடங்களுக்கும், மதியம் வேதியியல், விலங்கியல் பாடங்களுக்கும் பயற்சி அளிக்கப்படுகிறது.மேலும், பயிற்சிபெறும் மாணவர்களுக்கு, வாரந்தோறும் சனிக்கிழமைகளில், பயிற்சி தேர்வும் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ