உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பக்கத்து வீட்டு நாய்

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பக்கத்து வீட்டு நாய்

போரூர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வரும் தெரு நாய் கடித்து குதறியது.சென்னை போரூர், காரம்பாக்கம் சமயபுரம் பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன், 33. இவரது மகன் மோனிஷ், 6. நேற்று முன்தினம் இரவு சிறுவன் மோனிஷ், வீட்டின் அருகே தயாராருடன் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் தெரு நாய், திடீரென சிறுவன் மீது பாய்ந்து, இடது கையில் கடித்தது. அலறி அடித்து ஓடிய சிறுவன், பயத்தில் அங்கிருந்த கல்லில் தடுக்கி கீழே விழுந்தார். இதனால், சிறுவனின் முகம் மற்றும் காதின் பின்புறம் காயம் ஏற்பட்டது. சிறுவனின் தந்தை மற்றும் அங்கிருந்தோர் சிறுவனை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதில், சிறுவனின் காதின் பின்புறம் நான்கு தையல்கள் போடப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை