உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்க்கிங்கான நியூ ஆவடி சாலை போக்குவரத்து நெரிசலால் அவதி

பார்க்கிங்கான நியூ ஆவடி சாலை போக்குவரத்து நெரிசலால் அவதி

அண்ணா நகர், நியூ ஆவடி சாலையோரத்தில் அத்துமீறி நிறுத்தப்படும் குடிநீர் லாரிகள், தனியார் டிராவல்ஸ் வாகனங்களால், நாளுக்கு நாள் சாலை சுருங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.நியூ ஆவடி சாலையில், வில்லிவாக்கத்தில் இருந்து ஐ.சி.எப்., மற்றும் கீழ்ப்பாக்கத்தை நோக்கி செல்லும் சாலை, அயனாவரம் காவல் எல்லைக்கு உட்பட்டது.அதேபோல், கீழ்ப்பாக்கத்தில் இருந்து வில்லிவாக்கத்தை நோக்கி செல்லும் சாலை, அண்ணா நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட சாலை.இதில், அண்ணா நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட நியூ ஆவடி சாலையில், அத்துமீறி 10க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் வாகனங்கள் படையெடுத்து நிறுத்தப்படுகின்றன. அயனாவரம் எல்லைக்கு உட்பட்ட சாலையோரத்தில், குடிநீர் லாரிகள் உட்பட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதற்கு, இரு எல்லை போக்குவரத்து போலீசாரும் ஆதரவாக இருப்பதால், சாலை மேலும் சுருங்கி, அப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இரு எல்லை போக்குவரத்து போலீசாரின் அலட்சியப் போக்கால், நியூ ஆவடி சாலையில் தினமும் விபத்து ஏற்படுகிறது.விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, அபராதம் விதிக்க போக்குவரத்து இணை கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ