மேலும் செய்திகள்
நகராட்சி சந்தை வசூலில் வாரம் ரூ.20,000 மோசடி!
10-Sep-2025
அம்பத்துார்; பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக், '100 யார்ட்ஸ்' எனும் 'புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பள்ளி மண்டலம்' என்ற திட்டம், நேற்று அமலுக்கு வந்தது. அம்பத்துாரில் உள்ள அரசு உதவிபெறும் சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டத்தை கமிஷனர் சங்கர், நேற்று காலை துவக்கி வைத்தார். தொடர்ந்து, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், அது குறித்த சட்டம் மற்றும் 'ஆன்டி டிரக் கிளப்' செயல்பாடுகள் குறித்து, கமிஷனர் சங்கர், மாணவ - மாணவியருக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த திட்டத்தில், பள்ளி வளாகத்தில் இருந்து, '100 யார்ட்ஸ்' அதாவது, 91.44 மீட்டர் துாரத்தில் செயல்படும் மளிகை கடை மற்றும் பெட்டி கடைகளில், புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை அடையாளம் காணும் வகையில், சாலையின் இருபுறமும் தடுப்பு அமைத்து, வெள்ளை நிறத்தில் மைய கோடு போடப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில், 150 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
10-Sep-2025