உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதிய காவல் நிலையம் துவக்கம்

புதிய காவல் நிலையம் துவக்கம்

குன்றத்துார், மாங்காடு காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, மவுலிவாக்கத்தில் புதிய காவல் நிலையம் நேற்று துவக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகம் கட்டுப்பாட்டில் உள்ள மாங்காடு காவல் நிலையத்தின் எல்லை பரப்பு பெரியதாக இருந்தது. காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் நேரில் புகார் அளிக்கவும், குற்ற பகுதிகளுக்கு போலீசார் செல்லவும் தாமதம் ஏற்பட்டது. இதனால், மாங்காடு காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, முகலிவாக்கம் பிரதான சாலை மதனந்தபுரத்தில், தற்காலிக கட்டடத்தில் மவுலிவாக்கம் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, காவல் நிலையத்தை திறந்து வைத்தார். மவுலிவாக்கம் காவல் நிலைய எல்லை: மவுலிவாக்கம், பெரியபணிச்சேரி, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், முகலிவாக்கம். மொத்த பணியிடம்: ஒரு ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர், ஒன்பது முதல்நிலை காவலர்கள், 17 இரண்டாம் நிலை காவலர்கள் உட்பட 31 போலீசார், காவல் பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !