மேலும் செய்திகள்
தேர்தல் நடைமுறைகட்சியினர் ஆலோசனை
19-Mar-2025
வாக்காளர் பட்டியல் ஆலோசனைக் கூட்டம்
21-Mar-2025
சென்னை, சென்னை மாவட்டத்தில், தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில், நேற்று நடந்தது.இதில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான, வலுவான மற்றும் வெளிப்படையான சட்ட கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அனைத்து கட்சி கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்கப்பட்டது.மேலும், 100 சதவீதம் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிதாக ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.அதன்படி, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் எத்தனை பேர், சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களாக உள்ளனர் என்பதன் அடிப்படையில், ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
19-Mar-2025
21-Mar-2025