மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்
12-Sep-2025
பேட்டரி திருடர்கள் இருவர் கைது புளியந்தோப்பு: சவுகார்பேட்டை பெருமாள் கோவில் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25. இவர், அண்ணன் கதிரவனுடன் சேர்ந்து புளியந்தோப்பு டிம்லர்ஸ் சாலையில், மணல் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 7:00 மணி அளவில், இவர்களது கடைக்கு வந்த இரண்டு பேர் கடையில் இருந்த பேட்டரிகளை திருடிச் சென்றனர். இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், புளியந்தோப்பு பி.கே., காலனியைச் சேர்ந்த முகேஷ், 30, திருநாவுக்கரசு, 19 என, இருவரை கைது செய்தனர். கஞ்சா கடத்திய தம்பதி கைது ஓட்டேரி: ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலையில், கடந்த 15ம் தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த ஹரிகரன், 23 என்ற நபரிடம் இருந்து, ஒன்றரை கிலோ கஞ்சாவை, ஓட்டேரி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த ஓட்டேரி மங்களாபுரத்தைச் சேர்ந்த சதீஷ், 38 மற்றும் அவரது மனைவி அலமேலு, 28 ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டனர்.
12-Sep-2025