உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

டிபன் கடையை சூறையைாடிய ரவுடி கைது அயனாவரம்: அயனாவரம், பில்கிங்டன் சாலை பகுதியில் சாலையோர டிபன் கடை நடத்தி வருபவர் முத்து, 47. கடந்த மே 9ம் கடைக்கு வந்த நபர், சாப்பிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார். பணத்தை கேட்டபோது, முத்துவை தாக்கி கடையை சூறையாடி 1,000 ரூபாய் பறித்து தப்பினார். விசாரித்த அயனாவரம் போலீசார், திருவள்ளூரைச் சேர்ந்த ரவுடி அஸ்வின்குமார், 29 என்பவரை கைது செய்தனர். டீக்கடையில் பணம் பறித்த ரவுடி கைது அயனாவரம்: அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் அருகில் டீக்கடை நடத்தி வருபவர் ஆண்டனி, 42. நேற்று முன்தினம் மாலை, இவரது கடைக்கு வந்த அயனாவரம், சி.கே., சாலையை சேர்ந்த பாஷா, 30 என்பவர், கத்திமுனையில் கல்லாவில் இருந்த, 620 ரூபாயை பறித்து தப்பினார். விசாரித்த போலீசார், பாஷாவை நேற்று கைது செய்தனர். புழல் ஏரி நீர் திறப்பு அதிகரிப்பு சென்னை: புழல் ஏரி 21.20 அடி உயரம், 3.300 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது 2.707 டி.எம்.சி., அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில், மோந்தா புயல் மழை காரணமாக, ஏரிக்கான நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து, புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து புழல் உபரி கால்வாய் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, திருவள்ளூர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். கோட்டூர்புரத்தில் புது ரேஷன் கடை திறப்பு கோட்டூர்புரம்: அடையாறு மண்டலம், 170வது வார்டு, பள்ளிப்பட்டு பகுதியில், வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதியில் கீழ், 18 லட்சம் ரூபாய் செலவில், 530 சதுர அடி பரப்பில், புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த கடை நேற்று திறக்கப்பட்டது. இதனால், மழைக்காலங்களில் ரேஷன் பொருட்கள் நனைவதில் இருந்தும், அதிக துாரத்தில் இருந்து வந்து பொருட்கள் வாங்குவோருக்கும், விடிவு ஏற்பட்டுள்ளது. தம்பதியை தாக்கிய இருவர் கைது வியாசர்பாடி: வியாசர்பாடி, 'சி' கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 40. இவர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு மது போதையில் வந்த இருவர், 'போலீசில் காட்டி கொடுக்கிறாயா' எனக்கூறி வெங்கடேஷை தாக்கினர். தடுக்க வந்த வெங்கடேஷின் மனைவி தனலட்சுமியையும் தாக்கி சென்றனர். விசாரித்த போலீசார், வியாசர்பாடி, 'சி' கல்ணாயபுரத்தைச் சேர்ந்த கோபி, 28, பிரேம்குமார், 27 ஆகியோரை, நேற்று கைது செய்தனர். திருவொற்றியூரில் வீடுபுகுந்து திருட்டு திருவொற்றியூர்: திருவொற்றியூர், பலகை தொட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45. இவரது மனைவி அஸ்வினி 42. செந்தில்குமார் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி அஸ்வினி தன் குழந்தைகளுடன், சிங்கப்பூருக்கு 10 நாள் சுற்றுலா சென்றார். நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், 30,000 ரூபாய், அரை கிலோ வெள்ளி பொருள்கள் திருடு சென்றது தெரிந்தது. இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை